திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆண்டாங்குளம் பகுதியில்  ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று (09) செவ்வாய் கிழமை  நண்பகல் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 திருகோணமலை ஆண்டான் குளம் 10 வீட்டுத் திட்டம் பகுதியைச் சேர்ந்த    (வயது -18)  இளைஞர் ஒருவரே   இவ்வாறு கைது செய்யப்பட்டவராவர்.

 இவரிடமிருந்து 155  மில்லிக் கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த  சந்தேக நபரை திருகோணமலை தலைமையாக  பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.