கிழக்கு மாகாணத்தின் ஏறாவூரில் முகாந்திரம் வீதியில் உள்ள வீடொன்றின் கூரையின் நீர்தாங்கியொன்றினுளிருந்து கைக்குண்டு மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் பொலிஸார்,விசேட அதிரடிப்படை  மற்றும்  இரானுவத்தினர் இன்று (09) காலை சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போதே, கூரையின் நீர்த்தாங்கியிலிருந்து 2 கைக்குண்டுகள், மற்றும் 63 ரவைகள் என்பன மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட கைக்குண்டை ஏறாவூர் புன்னக்குடா பகுதியில் விசேடஅதிரடிப்படையினர் செயலிழக்கச் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.