தமிழர் வர­லாற்றில் மக்­களால் ஜீர­ணித்­துப்­பார்க்க முடி­யாத படுகொலை என்றால் அது நவாலி படு­கொ­லை­யையே உல­க­மெங்கும் பறை­சாற்றி நிற்கும். இந்­தப்­ப­டு­கொ­லையின் 24 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை ஆகும். இவ் நினைவு தினம் இவ்­வாண்டு உல­கெங்கும் நினைவு கூரப்­ப­ட­வுள்­ளது.

பூமியில் இடம்­பெற்ற தமி­ழி­னப்­ப­டு­கொ­லைகள் என்றும் மறைக்­கவோ - மறுக்­கப்­ப­டாத சூழலில் வர­லாற்று பதி­வு­க­ளாக பதி­யப்­பட்டு ஆய்வு செய்­யப்­ப­டு­கின்­றன.இப்­ப­டு­கொ­லை­களின் விளை­வாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளது சொந்த உற­வு­க­ளது நலன்கள் ஏன் தீர்வு செய்­யப்­ப­டாமல் உள்­ளன என்பது தொடர்­பாக உள்­நாட்­டிலும், சர்­வ­தேச புலம்­பெ­யர்­நா­டு­க­ளிலும் ஆரா­யப்­ப­டு­வ­துடன்இஇது தீர்வு எட்­டப்­ப­ட­வேண்டும் என்­பது குறித்து ஐ.நா மனித உரி­மைகள் பேர­வை­யிலும் ஆரா­யப்­ப­ட­வேண்­டிய ஒன்­றாக சமூ­க­வியல் நிபு­ணர்கள் கருத்து வெளியிட்டு வரு­கின்­றனர். 

இப்­ப­டு­கொலை வருந்­தத்­தக்­கது இதை ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யாது. எனது காலத்தில் இப்­பே­ரிடர் ஏற்­பட்­ட­தை­யிட்­டு­க­வ­லை­ய­டை­கின்றேன் என யாழில் 2017 இல் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்ட போது முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க கவலை வெளியிட்­டி­ருந்தார். 

நவாலி பிர­தா­ன­வீ­தி­யிலும் ஆலய வளா­கத்­திலும் களைப்­ப­டைந்து ஆறு­த­லுக்­காக தங்கியிருந்த வேளையில் விமானத்திலிருந்து வீசப்பட்ட13 குண்­டு­க­ளுக்கு 147 பேர் மர­ண­ம­டைந்த கொடூ­ர­மான தாக்­குதல் சம்­ப­வத்தை உல­கெங்கும் வாழும் தமிழர் நெஞ்­சங்கள் ஒரு போதும் மறக்­க­மாட்­டாது. 

முன்னாள் அரச தலை­வர்கள் ஆட்­சி­யா­ளர்­களின் பணிப்­பு­ரையின் பேரில் நடத்­தப்­பட்ட விமா­ன­த்தாக்­கு­தலில் 147 பேர் கொல்­லப்­பட்ட சம்­ப­வத்தை நாம் ஒரு­கணம் மீண்டும் மீட்­டிப்­பார்க்­கின்றோம்.

இந்த கொடூ­ர­மான நவாலி சென்.பீற்றர்ஸ் மற்றும் நவாலி ஸ்ரீ கதிர்­காம முருகன் ஆலயம் முன் இடம்­பெற்ற உயி­ரி­ழப்பு சர்­வ­தேச சமூ­கத்­தையே அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­ய­துடன் சம்­பந்­தப்­பட்ட தமிழ் உற­வு­க­ளையும் தமிழ் மக்­க­ளையும் சொல்­லொ­ணாத்­து­ய­ரத்­திற்கு இட்டுச் சென்­றுள்­ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஈழத்­தமிழ் வர­லாற்றில் நவா­லியில் இரத்த ஆறு ஓடிய ஒரு கோர­மான கொடிய நாளாக ஜூலை 9 பதி­யப்­பட்­ட­துடன் இன்று சர்­வ­தே­சத்­திலும் பதி­யப்­பட்டு ஐ.நா. வரை கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளது.

இத் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­களின் உற­வு­க­ளுக்கு அரசின் உத­விகள், நிவா­ர­ணங்கள் எவையும் வழங்­கப்­ப­டாத சூழலே இன்றும் உள்­ளது. அன்று தான் நவாலி சென்.பீற்றர்ஸ் தேவா­லயம் மற்றும் ஸ்ரீ கதிர்­காம முருகன் (சின்­னக்­க­திர்­காமம்) ஆலயம் என்­ப­வற்றின் மீதான தாக்­கு­தலில் அப்­பா­வி­க­ளான 147 பேர் காவு கொள்­ளப்­பட்­டனர். வலி­காமம் முழு­வதும் இடம்­பெற்ற வான் தாக்­கு­தலால் அந்­தப்­ப­குதி முழு­வதும் அதிர்ந்து கொண்­டி­ருந்த வேளையில், மாலை நேரத்தில் மக்கள் இடம்­பெ­யர்ந்து கொண்­டி­ருந்த தரு­ணத்தில் இலங்கை விமான படை­யி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட இனப்­ப­டு­கொ­லை­யாக பதி­யப்­பட்­டது. 

வட­மா­கா­ணத்தின் வலி­காமம் தென்­மேற்கு பிர­தேச செய­லக பிரிவின் நவா­லியூர் வர­லாற்றின் இந்த இரத்­தக்­கறை படிந்த நாளில் நிகழ்ந்த உயி­ரி­ழப்­பு­களை தமி­ழினம் ஒரு போதும் மறக்­காது, மறக்­கவும் முடி­யாது என்று அன்­றைய நிகழ்­வை­யொட்டி லண்டன் பி.பி.சி.(டீடீஊ) தமி­ழோசை செய்தி நிறு­வனம் செய்தி வெளியிட்­டது.

முன்­னோக்கி பாய்தல் எனப் பெய­ரிட்ட (டுநயி குழசறயசன) இரா­ணுவ நட­வ­டிக்­கையை வலி­காமம் பகு­தியில் தொடங்­கிய இரா­ணு­வத்­தினர் பலா­லி­யி­லி­ருந்தும் அள­வெட்­டி­யி­லி­ருந்தும் மிகக்­கொ­டூ­ர­மான முறையில் நிமி­டத்­திற்கு 30 இற்கும் மேற்­பட்ட எறி­க­ணை­களை நாலா புறமும் மேற்­கொண்­ட­துடன் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளையும் மேற்­கொண்­டி­ருந்­தனர்.

திடீ­ரென வலி­காமம் தென்­மேற்குஇ வலி. மேற்கு, வலி. தெற்கு, வலி­வ­டக்கு பகு­தியில் உள்ள மக்கள் குடி­யி­ருப்­புகள்இ ஆல­யங்கள் பொது நிறு­வ­னங்கள், அர­சாங்க மற்றும் பொது­ச்சேவை நிலை­யங்­களை நோக்கி அதி­காலை 5.20 மணியில் இருந்து தொடர்ச்­சி­யான விமான தாக்­கு­தல்­க­ளும், எறி­க­ணைத்­தாக்­கு­தல்­களும் சர­மா­ரி­யாக நடத்­தப்­பட்­டன. அந்த வேளையில் சகல வீதி­க­ளிலும் உலங்கு வானூர்­தி­களின் தாக்­கு­தல்கள் மற்றும் அகோ­ர­மான எறி­க­ணைத்­தாக்­கு­த­ல்க­ளினால் வீதிக்கு வீதி இறந்­த­வர்கள், காய­ம­டைந்து இரத்தம் சிந்­திக்­கொண்­டி­ருந்­த­வர்­களை மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்ல வாக­னங்கள் கூட இல்­லாத அவல நிலை, வாக­னங்­களை இயக்­கு­வ­தற்கு எரி­பொ­ருள்­களும் அற்ற பொரு­ளா­தார தடையால் இந்த பேரிடர் தொடர்ந்­தது. 

காயப்­பட்ட மக்­களை காப்­பாற்ற மருந்­த­கங்­களோ, மருத்­து­வர்­களோ சிகிக்சை நிலை­யங்­களோ காணப்­ப­டாத அவ­ல­மான சூழல் நில­வி­யது.

இறு­தியில் காய­ம­டைந்­த­வர்கள் சிகிச்­சை­யின்றி இறந்த நிகழ்­வு­க­ளையும் நாம் மறக்க முடி­யாது. அன்­றைய தினம் குடா­நாட்டின் பல்­வேறு வீதி­களின் ஊடாக இடம்­பெ­யர்ந்து கொண்­டி­ருந்த மக்கள் நவாலி சென்ற் பீற்றர்ஸ் ஆல­யத்­திலும் தாகம் தீர்ப்­ப­தற்­காக அமர்ந்து களைப்­பாறி அச­தியால் படுத்­து­றங்­கினர். அந்த வேளையில் யாழ். நக­ரப்­ப­கு­தியில் இருந்து தொடர்ச்­சி­யாக விமானத்திலிருந்து வீசப்பட்ட 13 குண்­டுகள் தான்­தோன்­றித்­த­ன­மாக மக்கள் ஒன்­று­கூ­டி­யி­ருந்த மேற்­படி இரு ஆல­யங்கள் மீதும் வீசப்­பட்­டன . 

அவ்­வ­ளவு தான் நவாலி கிராமம் ஒரு­கணம் அதிர்ந்­தது. வீதி­களில் காணப்­பட்ட மரங்கள் முறிந்து விழுந்­தன. வீடுகள் தரை­மட்­ட­மா­கின மதில்கள் வீழ்ந்து நொறுங்­கின. அந்­தப்­ப­குதி முழு­வ­திலும்  மக்கள் இரு­மணி நேரம் செல்ல முடி­யாத பெரும் புகை­மூட்டம் உரு­வா­னது. நவாலி சென்­பீற்றர்ஸ் தேவா­ல­யமும் சின்­னக்­க­திர்­காம ஆல­யமும், அயலில் உள்ள 67 இற்கு மேற்­பட்ட வீடு­களும் முற்­றாக அழிந்து சிதைந்­தன. சுமார் 147 பேர் அந்த இடத்­தி­லேயே நீர் அருந்த தண்ணீர் கேட்டு அந்த இடத்­தி­லேயே இரத்தம் சிந்தி உயி­ரி­ழந்­தனர். இந்த நிகழ்வில் கையி­ழந்து இகாலி­ழந்துஇதலை­யி­ழந்து ,வீதியில் சிதறிஇ குற்­று­யி­ராக கிடந்த மக்­களை இல­குவில் மறந்­து­விட முடி­யாது. 

சுமார் 360இற்கு மேற்­பட்டோர் காய­ம­டைந்த நிலையில் சிகிச்சை பய­ன­ளிக்­காத நிலையில் நீண்ட நேரம் குரு­தி­சிந்தி உயி­ரி­ழந்­ததை காணக்­கூ­டி­ய­தாக இருந்­தது. 

அன்­றைய தாக்­கு­தலில் பொது­மக்கள் சேவையில் முனைப்­புடன் செயற்­பட்ட நவாலி மகா­வித்­தி­யா­லய மாண­வத்­த­லைவன் செல்வன் சாம்­ப­சிவம் பிரதீஸ் தலை­சி­தறி  சாவ­டைந்தார். இதனை விட மக்­க­ளுக்­காக அர­சாங்­கத்தின் சார்பில் முழுச் சேவை­யாற்­றிய மக்­க­ளுடன் மக்­க­ளாக பங்­கு­கொண்டு அர்ப்­ப­ணித்து சேவை­யாற்­றிய வலி.தென்­மேற்கு சண்­டி­லிப்பாய் பிர­தேச செய­லக பிரி­வி­னையும் -134 நவாலி வடக்கு கிராம அலுவலரான செல்வி ஹேமலதா செல்வராஜா ,  சில்லாலை பிரிவு மூத்த கிராம அலுவலர் பிலிப்புபிள்ளை கபிரியேல் பிள்ளை ஆகியோர் அந்த சேவையின் போது அந்த சம்பவத்தில் மரணமடைந்த அரசாங்க அலுவலர் சார்பில் பதியப்பட்டனர். 

அன்றையதினம் மக்கள் தொண்டு பணியில் உணவு,குடிதண்ணீர் வழங்கிக்கொண்டிருந்த 48 தொண்டர்களும்  அந்த இடத்தில் துடிதுடித்து உயிரிழந்ததை நாம் மறக்க முடியுமா?

என்பதனை இப்படுகொலை சம்பவம் சுட்டி காட்டி நிற்கின்றது. இதனை விட நவாலி படுகொலை சம்பவம் தொடர்பாக நவாலி சென் பீற்றர்ஸ் ஆலய வீதியிலும் நவாலி வடக்கு புலவர் வீதியிலும் உள்ள நினைவுச்சின்னங்கள் வரலாறுகளை நினைவூட்டுகின்றன. ஓவ்வொரு ஜுலை 9 இலும் இந்த நினைவுச்சின்னங்களில் ஒளியேற்றப்பட்டு அனுஷ்டிக்கப்படுகின்றன.