சட்டவிரோதமாக டோஹா கட்டாரிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 46 இலட்சம் ரூபா பெறுமதி சிகரெட்டுகளுடன் 4 பேரை விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 4 பேரும் மாத்தளையைச் சேர்ந்தவர்களென தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு இலட்சத்து 32 ஆயிரம் டொப் மௌடன் வகை சிகரெட்டுகளே இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் நால்வரையும் இன்று அதிகாலை 2 மணிக்கு கைதுசெய்து  விமானநிலைய சுங்க அதிகாரிகள் சிகரெட்டுகளை கைப்பற்றியதுடன் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்துள்ளனர்.