(செ.தேன்மொழி)

மொனராகலை -அலியாவத்த வனப்பகுதியில் தீ மூட்டியமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மொனராகலை வனப்பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் திடீர் தீபரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொலிஸார் தீ மூட்டியமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட இருவரை சந்தேகத்தில் கைது செய்ததாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.