அமெரிக்காவை சேர்ந்த சிறிய குழந்தை ஒன்று அட்லாண்டிக் பெருங்கடற்கரையில் அமைந்துள்ள புவர்ட்டோரிக்கோவில்  ரோயல் கரீபியன் பயணக் கப்பலில் இருந்து விழுந்து உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ரோயல் கரீபியன் பயணக் கப்பலான "கடல்களின் சுதந்திரம்" என்ற கப்பலிலின் 11 ஆவது தளத்தில் இருந்து ஒன்றரை வயதான சிறுமி ஞாயிற்று கிழமை கீழே தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

புவர்ட்டோ ரிக்கோவின் பொது பாதுகாப்புத் துறையினர் சிறுமியின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த சிறுமி இந்தியானாவின் தெற்கு பெண்ட் பகுதியை சேர்ந்த பொலிஸ் ஒருவரின் குழந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இது ஒரு விபத்து என்று கூறப்பட்டுள்ளது. சிறுமியின் உடல் தடயவியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியாமியை தளமாகக் கொண்ட ரோயல் கரீபியன் பயணக் கப்பலின் அறிக்கையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு நிறுவனத்தின் பராமரிப்பு குழு உதவி வழங்குவதாக கூறியுள்ளது.

இக்குறித்த சம்பவத்தைதொடர்ந்து  அனைத்து பாதுகாப்பு விதிகளையும் திட்டங்களையும் பின்பற்றுமாறு கப்பல்களில் ஏறும் பயணிகளை கடலோர காவல்படை கடுமையாக அறிவுறுத்தியுள்ளார்கள்.