கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்ட சிறப்பு விமானம் இன்று நாட்டில் இருந்து இந்தியாவிற்கு பயணமாகவுள்ளது.

கட்­டு­நா­யக்க, பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலை­யத்தில்உயர் தொழில் நுட்­பத்­துடன் கூடிய "ZS-ASN" ரகத்­தி­லான "The Basler BT-67" என்ற விமா­னமே தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது. 

குறித்த விமானம் ஒரே நேரத்தில் 1000 மீற்றர் உய­ரத்­தி­லி­ருந்து நிலத்தைத் துல்­லி­ய­மா­கவும் மேலோட்­ட­மா­கவும் படம் பிடிக்­கக்­கூ­டி­யது.

மூன்று நாட்கள் திட்­டத்­துக்­காக குறித்த விமானம் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ள­தாக, சிவில் விமான சேவைகள் அதி­கார சபை தெரி­வித்­துள்­ளது. இந்­தோ­னே ­சி­யா­வி­லி­ருந்து இலங்­கைக்கு வந்­துள்ள குறித்த விமானம், இன்று இந்­தியா நோக் கிப்  புறப்­ப­ட­வுள்­ளது.

 புவிச்சரி­த­வியல் அளவை மற்றும் சுரங்கப்  பணி­ய­கத்­திடம் இது தொடர்பில் வின­வி­ய­போது,  விமா­னத்தின் வருகை தொடர்பில் தாம் அறிந்­தி­ருக்­க­வில்லை என்றும் ஆனால், நாட்டில் எவ்விதக்  கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என் றும்  பணியகம் சுட்டிக் காட்டியுள்ளது.