பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரட்ண அனுமதி வழங்கியுள்ளார்.

அவர்கள் இருவரும் தலா ஐந்து இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்லவே நீதிவான் இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்த குற்றச்சாட்டின் கீழேயே இவர்கள் இருவரும் கடந்த 2 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.