அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 238 அகதிகளை சிறைப்பிடித்தது மெக்ஸிகோ

Published By: Daya

09 Jul, 2019 | 11:53 AM
image

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 200 அகதிகளை மெக்சிகோ அரசு தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று  தகவல் வெளியிட்டுள்ளது. 

மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து மெக்ஸிகோ வழியாக மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர். அதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மெக்ஸிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டவும் நடவடிக்கை எடுத்துள்ளார். 

 

இதற்கிடையே, அகதிகள் ஊடுருவுவதைத் தடுக்க மெக்ஸிகோ-அமெரிக்கா இடையே கடந்த மாதம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, அகதிகள் ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மெக்ஸிகோ உறுதி அளித்தது. 

அதன்படி, மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு செல்ல முயன்ற 228 அகதிகளை சமீபத்தில் மெக்ஸிகோ அரசு தடுத்து நிறுத்தி சிறைப்பிடித்துள்ளது. சரக்கு லொறியை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனையிட்டபோது அவர்கள் பிடிபட்டுள்ளனர். குறித்த  நபர்களை சட்டவிரோதமாக வாகனத்தில் ஏற்றிச் சென்ற இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த நபர்கள் அனைவரும் கௌதமாலா, ஹோண்டுராஸ் மற்றும் எல் சால்வடோர் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17