(நா.தனுஜா)

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிடும் நபர்களின் பேஸ்புக் கணக்குகளை நீக்கும் செயற்பாடு தற்போது கலைத் துறையில் பிரபலம் பெற்றவர்கள் வரை நீண்டிருப்பது கவலை அளிக்கிறது என தேசிய ஒற்றுமைக்கான சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அதன் பணயக் கைதி போன்று செயற்படும் பேஸ்புக் நிறுவனத்தின் இந்த செயற்பாடுகளை நிறுத்துவதற்காகத் தலையீடு செய்வது எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான பாராளுமன்றத்தின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களினதும் பொறுப்பாகும் எனவும் அச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

இவ்விடயம் குறித்து அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வறு குறிப்பிடப்பட்டுள்ளது.