(எம்.எப்.எம்.பஸீர்)

காத்தான்குடி பிரதேசத்தில் 20 பேருக்கு ஷரிஆ சட்டத்தின் கீழ் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து  தம்மிடம் தரவுகள் இருப்பதாக கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சி.ஐ.டி. பிரதானி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் அதனை மையப்படுத்தி சி.ஐ.டி. தற்போது குறித்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.