அதிபரின் திடீர் இடமாற்றத்தை நிறுத்தக் கோரி மாணவர்கள், பெற்றோர் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Digital Desk 4

08 Jul, 2019 | 02:41 PM
image

மன்னார் சாந்திபுரம் அரச தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் திடீர் என மன்னார் வலயக்கல்வி பணிமையினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

 குறித்த அதிபரின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரி இன்று திங்கட்கிழமை (8) காலை 7 மணி தொடக்கம் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் நலன் விரும்பிகள் என பலர் இணைந்து பாடசாலைக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இன்று திங்கட்கிழமை (8) காலை பாடசாலைக்கு முன் ஒன்று கூடிய  சாந்திபுரம் , ஜீவநகர், ஜிம்ரோன் நகர் கிராம மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் குறித்த பாடசாலை அதிபரின் இட மாற்றம் தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் பாடசாலை நலன் புரிச்சங்க உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் தங்களிடம் எந்த ஒரு கருத்துக்களையும் கேட்காது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே குறித்த இடம் மாற்றத்தை உடனடியாக இரத்துச் செய்யும் வரை பாடசாலை செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் இன்றைய தினம் பாடாசாலை பொறுப்புக்களை ஒப்படைத்து மாற்றம் பெற்று செல்ல வந்த அதிபரையும் குறித்த பெற்றோர்கள் பாடசாலை வளாகத்தினுள் செல்ல அனுமதிக்கவில்லை.

குறித்த விடயம் தொடர்பாக  வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சால்ஸ் நிர்மலனாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.

இதே வேளை மன்னார் நகர சபை உறுப்பினர்களும் சம்பவ இடத்திற்கு சென்று மக்களிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர்.

 அதே நேரத்தில் குறித்த இடமமாற்றம் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உட்பட பாடசாலை நலன் புரிசங்கத்தினருடன் கலந்து பேசி ஆலோசனைகள் பெற்ற பின் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் வலயகல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த அதிபரை மீள நியமிக்கும் வரை தங்கள் போரட்டத்தை கைவிடபோவதில்லை என பெற்றோர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்