(நா.தனுஜா)

மட்டக்களப்பு - ஷரியா பல்கலைக்கழகம் தொடர்பிலும், இதற்கு வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற நிதி குறித்தும் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். 

அம்பாறை நகர அபிவிருத்தி நிர்வாகக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இந்த பல்கலைக்கழகத்திற்காக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கப்பெற்ற நிதியை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தாது சிலர் தம்முடைய தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியிருப்பார்கள் என்றால் அவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, உரிய தண்டணையும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறில்லை என்றால் இந்த பிரச்சினை இன்னும் பாரதூரமானதாகிவிடும் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.