பாரா­ளு­மன்றில் இடம்­பெற்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல் சம்­பவம் குறித்து இன்று காலை 9 மணிக்கு நடை­பெறும் கட்சித் தலை­வர்கள் கூட்­டத்தில் ஆராய்ந்து தீர்­மானம் எடுக்­கப்­ப­டு­மென சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய சபையில் அறி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று புதன்­கி­ழமை சபாநா­யகர் கரு­ஜ­ய­சூ­ரிய தலை­மையில் பிற்­பகல்

ஒரு மணிக்கு கூடி­யது. இதன்­போது சபா­நா­யகர் அறி­விப்பு செய்­யப்­பட்டபோதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் கூறு­கையில்,

பாரா­ளு­மன்­றத்தில் உறுப்­பி­னர்­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற மோதல் குறித்து விசா­ர­ணையை பிரதி சபா­நா­யகர் திலங்க சும­தி­பால மற்றும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தித்­த­லைவர் செல்வம் அடைக்­க­ல­நாதன் ஆகியோர் மேற்­கொண்டு என்­னி­டத்தில் அறிக்கை சமர்ப்­பித்­துள்­ளனர். அதன் அடிப்­ப­டையில் இன்று காலை 9 மணிக்கு பாரா­ளு­மன்றில் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படவுள்ளது என்றார்.