யாழ்ப்பாணம் - கொழும்பு தனியார் பஸ் சாரதி ஒருவரைக் மிரட்டி கப்பம் கோரிய குற்றஞ்சாட்டில் தேடப்பட்டு வந்த இரு சந்தேகநபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இம்மாதம் முதலாம் திகதி குறித்த சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் - கொழும்புக்கான தனியார் பஸ் சாரதியிடம் கப்பம் கோரி அச்சுறுத்தியுள்ளனர். 

அச்சுறுத்தல் தொடர்பாக பஸ் சாரதி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து இரு முச்சக்கர வண்டிகளும், தொலைபேசியொன்றும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் இன்று காலை அலுத்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். 

கொட்டாஞ்சேனை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.