வவுனியா ஈரப்பெரியகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்குனாமடுப்பகுதியில் இன்று அதிகாலை  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து சுற்றுலாப்பயணிகளை யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் சென்ற சொகுசு பஸ் ஒன்று வீதி கல்குனாமடுப் பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணியளவில் வீதியைவிட்டு விலகி அருகிலுள்ள மின்கம்பத்துடன் மோதியுள்ளது.

இதன்போது சொகுசு பஸ்ஸில் பயணித்த பயணி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சாரதியின் தூக்க மயக்கத்தையடுத்தே இவ்விபத்து இடம்பெற்றிருக்கலாம் என்றும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.