(எம்.எப்.எம்.பஸீர்)

சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் அச்சுறுத்தல்கள், உள் நாட்டு வெளிநாட்டு இன, மதவாத அடிப்படை அமைப்புக்களைக்  கண்காணிக்கவும்,  அது தொடர்பில் செயற்படவும் இராணுவத்தில் விஷேட பிரிவொன்றினை அமைத்து செயற்பட விஷேட திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.

யாழ். கட்டளைத் தளபதியாக செயற்பட்ட மேஜர்  ஜெனரால் தர்ஷன ஹெட்டி ஆரச்சியின் கீழ் இந்த சிறப்புப் பிரிவை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாதுகபபு உயர் வட்டாரங்கள் தெரிவித்தன.  

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய இந்த புதிய திட்டம் நடை முறைப்டுத்தப்படவுள்ளதாகவும், மேஜர் ஜெனரால் தர்ஷன ஹெட்டி ஆரச்சியின் கீழ், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை சேர்ந்த சுமார் 250 பேர் வரை இந்த பிரிவில் உள்வாங்கபப்டவுள்ளதாகவும்  அந்த தகவல்கள் சுட்டிக்காட்டின.