மனங்­க­ளை­விட்டு நீங்­காத திரு­மலை படு­கொ­லைகள்

Published By: J.G.Stephan

07 Jul, 2019 | 04:52 PM
image

2006  ஆம் ஆண்டு திரு­கோ­ண­ம­லையை கதி­க­லங்க வைத்த 5 மாணவர் படு­கொ­லை­யோடு சம்பந்­தப்­பட்­ட­தாக கருதி கைது­செய்­யப்­பட்டு கடந்த 6 வரு­டங்­க­ளாக சிறை­வைக்­கப்­பட்­டி­ருந்த  12 அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் சுமார் 13 வரு­டங்­க­ளுக்­குப்­பி­றகு தீர்ப்பு வழங்­கப்­பட்ட நிலையில்  கடந்த புதன்­கி­ழமை (3.7.2019) விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்கள். அவர்­களின் விடு­த­லைக்­கான தீர்ப்பை திரு­கோ­ண­மலை நீதவான் நீதி­மன்ற பிர­தான நீதி­பதி முகமட் ஹம்சா வழங்­கி­யுள்ளார்.

வழக்கு தொடுநர் சார்­பாக  முன்­வைக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் இவ்­வ­ழக்கில் சம்­பந்­தப்­பட்ட எதி­ரி­களை  மேல் நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­து­வ­தற்கு  போது­மா­ன­தாக  அமை­யாத கார­ணத்­தினால்  இவ்­வ­ழக்­கி­லி­ருந்து  13 எதி­ரி­க­ளையும் விடு­விப்­ப­தாக  திரு­மலை நீதவான் நீதிமன்ற பிர­தான நீதவான் தீர்ப்பு வழங்­கி­யுள்ளார். பீனல் கோட்டின் 154 மற்றும் 153 ஆவது பிரி­வு­களின் கீழ்  இந்த வழக்கை தொடர்ந்து நடத்­து­வ­தற்­கான போதிய ஆதா­ரங்கள் இல்­லை­யெ­னக்­கூறி மேற்­படி தீர்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

   கடந்த     ஆறு வரு­டங்­க­ளுக்கு மேலாக  விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த  5 மாணவர் படு­கொலை வழக்­கா­னது கடந்த மே மாதம் 15 ஆம் திக­தியும் அதனைத் தொடர்ந்து கடந்த  புதன்­கி­ழமை விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­ட­ போது  இவ்­வ­ழக்கு  தொடர்­பாக அதி­ர­டிப்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ராக 15 குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு  31 சாட்­சி­யா­ளர்கள் அழைக்­கப்­பட்டு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

குறிப்­பிட்ட வழக்கை தொடர்ந்து நடத்­து­வ­தற்கு போதிய ஆதா­ரங்கள் இல்­லை­யென்ற அடிப்­ப­டையில் மேற்­படி வழக்கை தள்­ளு­படி செய்தார் நீதி­பதி. இலங்­கையில் இடம்­பெற்ற மனி­த­வு­ரிமை மீறல் தொடர்­பான படு­கொ­லை­யோடு தொடர்­பு­பட்­ட­தாக பேசப்­பட்­டது மாத்­தி­ர­மன்றி ஐக்­கிய நாடுகள் மனி­த­உ­ரி­மை ­பே­ர­வை­யிலும் இலங்­கைக்­கெ­தி­ரான மிக மோச­மான  மனி­த­வு­ரிமை மீற­லாக  குற்றம் சாட்­டப்­பட்டு வந்த பல்­க­லைக்­க­ழக மாணவர் ஐவரின் படு­கொ­லை­யா­னது முன்னாள் மனி­த­வு­ரிமை ஆணை­யாளர் நாயகம் நவ­நீதம் பிள்­ளையால் கடு­மை­யாகக் கண்­டிக்­கப்­பட்­டதும் அறிக்­கைப்­ப­டுத்­தப்­பட்­ட­து­மான படு­கொ­லை­யாகும்.

இப்­ப­டு­கொ­லை­யோடு சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்­தின்­பேரில் ஒரு உதவி பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் உட்­பட  13 அதி­ர­டிப்­படை­யினர் கைது செய்­யப்­பட்டு இவர்கள் மீது திரு­கோ­ண­மலை நீதி­மன்றில் வழக்­குத் ­தொ­ட­ரப்­பட்­டது.

யுத்தம் தீவிரம் பெற்­றி­ருந்த 2006 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி திரு­கோ­ண­மலை கடற்­க­ரைக்கு முன்­பா­க­ வி­ருக்கும் காந்தி சிலைக்கு முன்­பாக மாலைப்­பொ­ழுது, பொழு­து­போக்­காக உரை­யாடிக் கொண்­டி­ருந்த  5 மாண­வர்கள் மீது இனந்­தெ­ரி­யா­த­வர்­களால் நடத்­தப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோகம் மற்றும்  குண்­டு­வீச்சு கார­ண­மாக 5 மாண­வர்­களும் படு­கொலை செய்­யப்­பட்­டார்கள்.

  திரு­கோ­ண­மலை இந்­துக்­கல்­லூ­ரியில் கல்வி பயின்று பல்­க­லைக்­க­ழ­கத்­துக்கு 2005 – 2006 கல்­வி­யாண்­டுக்கு தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்த நான்கு மாண­வர்­களும் அவர்­களின் நண்பர் ஒரு­வ­ரு­மாக  வன்­னியார் வீதி­யைச் ­சேர்ந்த தங்­கத்­துரை சிவா­னந்தா, புனித மரியாள் வீதி மனோ­கரன் ரஜீகர்,  வித்­தி­யா­லயம் வீதி சண்­மு­க­ராஜ சஜேந்­திரன், சிவன் வீதி லோ.ரொகாந்த் மற்றும் போ. ஹேமச்­சந்­திரன்  ஆகிய ஐந்து மாண­வர்­க­ளுமே படு­கொலை செய்­யப்­பட்­ட­வர்­க­ளாவர்.

  குறித்த தினம் மாலை 7 மணி­ய­ளவில்  திரு­கோ­ண­மலை கடற்­க­ரைக்கு முன்­பாக நக­ர­ச­பையால்  நிர்­மா­ணிக்­கப்­பட்ட காந்தி சிலைக்­க­ருகில்  மாண­வர்கள் இருந்து  உரை­யா­டிக்­கொண்­டி­ருந்­த­ போது  சுமார் இரவு 7.30 மணி­யி­ருக்கும் கோணேசர் ஆல­யத்­துக்கு செல்லும் கட­லுடன் அண்­டிய வீதியில் வந்த பச்சைநிற முச்­சக்­க­ர­வண்­டி­யி­லி­ருந்த  அடை­யாளம் தெரி­யாத நபர்கள் உரை­யா­டிக்­கொண்­டி­ருந்த மாண­வர்கள் மீது  கைக்குண்டை  வீசி­விட்டு கோணேசர் ஆலய திசையை நோக்கி  ஓடி மறைந்­துள்­ளனர். 

இந்த திடீர் தாக்­கு­தலால் அதிர்ச்­சி­ய­டைந்த மாண­வர்கள்  தம்மை பாது­காக்­கத்­தெ­ரி­யாது ஓடவும் முடி­யாமல் நின்ற வேளையில் டொக்­கியாட் வீதி பக்­கத்­தி­லி­ருந்து  ஓடி­வந்த ஆயுத தாரிகள் (சீரு­டைக்­காரர்) இம்­மா­ண­வர்­களை  சுற்­றி­வ­ளைத்­துள்­ளனர்.

சுற்றி வளைத்த ஆயுத தாரிகள் செய்­வ­த­றி­யாது திகைத்து நின்ற மாணவர்  ஏழு­பே­ரையும் தனித்­த­னி­யாக பிரித்­தெ­டுத்து  அம்­மா­ண­வர்­களை நடு­வீ­தியில் குப்­பு­றப்­ப­டுக்­க ­வைத்து சர­மா­ரி­ய­ாக காது­ வ­ழி­யாக துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்­துள்­ளனர்.

இத் துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தினால் மூளை சிதறி ஐந்து மாண­வர்­களும் ஸ்தலத்­தி­லேயே மரணமடைந்­துள்­ள­தாக ஊட­கங்கள் செய்­தி­ வெளி­யிட்­டி­ருந்­த­துடன்  வழக்­குப்­ப­தி­வுகள் மூலமும்  வழங்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் மற்றும் மனி­த­வு­ரிமை பேர­வைக்கு வழங்­கப்­பட்ட 

ஆதா­ரங்கள் மூலமும் அறி­ய­வ­ரு­கி­றது.

  இச்­சம்­பவ தினம் 7 மாண­வர்கள் ஒன்று கூடி நின்ற  போதும் சம்­பவம் நடை­பெற்­ற­வேளை இரு மாண­வர்கள்  கும்­மி­ருட்டை பயன்­ப­டுத்தி தப்­பி­யோட முயற்சி செய்­தி­ருக்­கி­றார்கள். தப்­பிக்க முயன்ற தருணம் அவர்கள் மீது சர­மா­ரி­யாக துப்­பாக்­கிப்­பி­ர­யோகம் செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. இதில் ஒரு மாணவன் படு­கா­யங்­க­ளுடன் திரு­கோ­ண­மலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக கொழும்­புக்கு கொண்­டு­செல்­லப்­பட்­ட­தா­கவும் மற்ற மாணவன் படு­கா­யங்­க­ளுடன் தனது நண்பர் ஒரு­வரின் உத­வி­யுடன் வீடு சென்று பின் பாது­காப்­புக்­க­ருதி  ஊரை­விட்டு வெளி­யே­றி­ய­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது.  இரு மாண­வர்­களும் தெய்­வா­தி­ன­மாக உயிர் தப்பி ஓடி­விட்­டார்கள் என்­பது பின்­னாளில் அறி­யப்­பட்ட விடயம்.

  காந்தி சிலை­யடி சீரு­டைக்­கா­ரர்­களால் சுற்றி வளைக்­கப்­பட்­ட­போது அந்த அவ­கா­சத்தைப் பயன்­ப­டுத்தி மாணவன் மனோ­கரன் ரஜீகர் தனது கைய­டக்கத் தொலை­பேசி மூலம் தந்­தை­யுடன் தொடர்­பு­கொண்டு தாம்  சுற்றி வளைக்­கப்­பட்ட அபா­யத்தை  தெரி­வித்­துள்ளான்.  செய்தி கேட்டு அரு­கி­லுள்ள புனி­த­ம­ரியாள் வீதியில் குடி­யி­ருக்கும் டாக்டர் மனோ­கரன் சம்­பவம் நடை­பெற்ற இடத்­துக்கு ஓடி­வந்­துள்ளார். அவர் கண் முன்னால் மகன் சுடப்­பட்­டுள்ளான்  என பத்­தி­ரி­கைகள் அக்­கா­லத்தில் செய்தி வெளி­யிட்­டி­ருந்­தன. 

   இச்­சம்­பவம் தொடர்பில் பல்­வேறு செய்­திகள் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தன. மேற்­படி மாண­வர்கள் வைத்­தி­ருந்த கைக்­குண்டு வெடித்தே அவர்கள் இறந்­தி­ருக்­கலாம் என அரச தரப்­பி­ன­ராலும் அவ்­வாறு இல்லை திட்டமிட்ட முறையில் சீரு­டைக்­கா­ரர்­களால் எம்­பிள்­ளைகள் சுடப்­பட்­டுள்­ளனர் என  அவர்­க­ளு­டைய பெற்­றோர்­க­ளாலும் சாட்­சி­யங்கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. இச்­சாட்­சி­யங்கள் போர் நிறுத்த கண்­கா­ணிப்­புக்­குழு மற்றும் மனி­த­வு­ரிமை ஆணைக்­குழு ஆகி­ய­வற்­றிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

  இம்­மா­ண­வர்­களின் படு­கொலை சம்­ப­வ­மா­னது 2006 ஆம் ஆண்­ட­ளவில் உள்­நாட்­ட­ள­விலும் சர்­வ­தேச அள­விலும்  அதிக கவ­னத்தைக் கொண்ட சம்­ப­வ­மாக பல தரப்­பி­ன­ராலும் எடுத்­துக்­ கூ­றப்­பட்­டி­ருந்­தது. பாதிக்­கப்­பட்ட குடும்­பங்­களை சேர்ந்­த­வர்கள் பயத்தின் கார­ண­மாக நாட்டை விட்டு ஓடி அடைக்­கலம் கோரி­யி­ருந்­தமை சர்­வ­தேச ஊட­கங்கள் மூலம்  தெரி­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது.

   2006 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் இடம்­பெற்ற இக்­கொ­டிய சம்­பவம் தொடர்பில் அர­சாங்­கமோ அல்­லது நீதி­யா­ளர்­களோ சட்­டத்­து­றை­யி­னரோ இது தொடர்பில் மௌனம் சாதித்த வேளை  பல்­வேறு மனி­த­வு­ரிமை அமைப்­புக்­களும் சர்­வ­தேச நீதி­ய­ர­சர்­களும்  இலங்கை அர­சாங்­கத்­தின்­மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தார்கள். உள்­நாட்டு வெளி­நாட்டு மனி­த­வு­ரிமை அமைப்­புக்கள் அர­சாங்­கத்­துக்கு கொடுத்த அழுத்தம் கார­ண­மாக இப்­ப­டு­கொ­லை­யோடு சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்­ய­வேண்­டிய நிர்ப்­பந்தம் இலங்கை அர­சாங்­கத்­துக்கு ஏற்­பட்­டது. குறிப்­பாக  மஹிந்த அரசு இது தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டிய சூழ்­நி­லைக்கு தள்­ளப்­பட்­டது.

 சந்­தே­கத்­தின்­பேரில் உத­வி­ பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் உட்­பட அக்­கா­லப்­ப­கு­தியில் திரு­கோ­ண­ம­லையில் கட­மை­யாற்­றிய 13 விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் கைது செய்­யப்­பட்­டார்கள். ஏ. சரச்­சந்­தி­ர­பெ­ரேரா,   ஜி.ஏ.ரோஹித விஜத்­த­கு­மார,  ஜி. ஆனந்த எல்.பி. ஜெயலால்,   

ஏ. கமல்­பி­ரதீப்,  ரவில் குமார ரத்­நா­யக்க, சமிந்த லோஜித உத­ய­மி­கி­ர­பண்­டார, கே. எம்.கே.சஞ்­சீவ, எம். ஏ. விமல் பண்­டார, ஜே. எம்.நிமல்­பண்­டார, ஜெய­சே­கர திசா­நா­யக்க, ஜெயந்த திசா­நா­யக்க,  எஸ். இந்­திக்க துஷார  ஆகிய 12 அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் 2013 ஆம் ஆண்டு கைது செய்­யப்­பட்­டார்கள் . 2006 ஆம் ஆண்டு இடம்­பெற்ற இச்­சம்­பவம் தொடர்பில் சுமார் 7 வரு­டங்­க­ளுக்­குப்­பின்னே சந்­தே­கத்­தின்­பேரில் 2013 ஆம் ஆண்டு  அதி­ர­டிப்­ப­டை­யினர்  கைது செய்­யப்­பட்­டார்கள். புல­னாய்­வுப்­பி­ரி­வினர் குறித்த நபர்­களை கைது செய்து வழக்கு தொடர்ந்­தனர். இவ்­வ­ழக்கு துரி­தப்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யதன் அழுத்தம் ஜெனீவா மனி­த­வு­ரிமை பேர­வை­யினால் ஏற்­பட்­டது என்­பதை அப்­போ­தைய மனி­த­வு­ரிமை அமைப்­புக்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தன. 2013 ஆம் ஆண்டின் ஜெனீவா மனி­த­வு­ரி­மை ­பே­ர­வையில் 5 மாண­வர்­களின் படு­கொலை சம்­ப­வ­மா­னது  முக்­கி­ய­மா­ன­தொரு விட­ய­மாக பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டது மாத்­தி­ர­மன்றி,  அதன் நிகழ்ச்சி நிர­லிலும் இடம்­பெற்­றதன் கார­ண­மாக  இலங்கை அர­சாங்­க­மா­னது தனது நீதித்­தன்­மையை நிரூ­பிக்கும் நோக்கில் விசா­ர­ணை­களை முடுக்­கி­

விட்­டது. மேலும் திரு­கோ­ண­மலை நீதி­மன்றில் 13 அதி­ர­டிப்­ப­டை­யினர் மீதும் வழக்கு தொட­ரப்­பட்­டது. 

   இதே வருடம் படு­கொலை செய்­யப்­பட்ட மாணவன் ரஜீ­கரின் தந்­தை­யான டாக்டர் மனோ­கரன்  தனது மகனின் படு­கொலை சம்பந்­த­மாக வாக்கு மூலம் அளிக்கும் சந்­தர்ப்­ப­மொன்று ஜெனீவா மனி­த­வு­ரிமை பேர­வை­யினால் வழங்­கப்­பட்­டது. அவர் தனது வாக்கு மூலத்தில்,  என­து ­மகன் ரஜீகர் சுட்­டுக்­கொல்லப்­பட்ட  சம்­பவம் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­தப்­பட்டு நீதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வனின் தந்­தை­யான காசிப்­பிள்ளை மனோ­கரன் கதறி அழுது கோரிக்கை விடுத்­தி­ருந்தார். சர்­வ­தேச மன்­னிப்பு சபையின் சார்பில் பங்கு கொண்ட மனோ­கரன்  சுட்­டுக்­கொலை செய்­யப்­பட்ட ஐவரும் மாண­வர்­கள் என்றும் இவர்கள் தனது மகனின் நெருங்­கிய நண்­பர்கள் என்றும் தமி­ழர்கள் என்ற ஒரே கார­ணத்­துக்­கா­கவே திட்­ட­மிட்­ட­மு­றையில் தெரிவு செய்­யப்­பட்டு சுட்டுக் கொலை செய்­யப்­பட்­ட­தா­கவும் மகனின் மூளை சிதறி கொல்­லப்­பட்ட அந்த கொடூ­ரத்தை தான் நேரே பார்த்­த­தா­கவும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்தார்.

 இப்­ப­டு­கொலை சம்­ப­வ­மா­னது 2014 ஆம் ஆண்டு ஜெனீவா மனி­த­வு­ரி­மை­பே­ர­வையில் இன்னும் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தது. முன்னாள் மனி­த­வு­ரிமை பேர­வையின் ஆணை­யாளர் நாயகம்  இலங்­கைக்கு விஜயம் செய்து ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டி­ருந்தார். 20 பக்கம் கொண்­டதும் 74 விட­யங்­களை உள்­ள­டக்­கி­ய­து­மான அவ்­வ­றிக்­கையில்  திரு­கோ­ண­ம­லையில் 2006 ஆம் ஆண்டு ஜன­வ­ரியில் இடம்­பெற்ற 5 மாணவர் படு­கொலை சம்பந்­த­மாக பின்­வரும் விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார். திரு­கோ­ண­மலை கடல் முகப்பில் படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வர்­களின் இப்­ப­டு­கொ­லைக்கு சாட்­சி­யங்­க­ளாக முன்­வந்­த­வர்கள்  அச்­சு­றுத்தல் கார­ண­மாக நாட்டை விட்டு  வெளி­யே­றி­யுள்­ளனர் என அவ்­வ­றிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­த­தோடு  அவ்­வ­றிக்­கையின் 48 ஆவது பிரிவில் சொல்­லப்­பட்­ட­தா­வது,  2006 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2 ஆம் திகதி திரு­கோ­ண­மலை கடல் முகப்பில் வைத்து பாது­காப்பு படை­யி­னரால் நையப்­பு­டைக்­கப்­பட்டு சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தாக கூறப்­பட்­டி­ருந்­தது.

திரு­கோ­ண­மலை நீதவான் நீதி­மன்­றினால் மாணவர் படு­கொலை சம்­பவம் தொடர்­பான  வழக்கு பிர­சித்­தி­பெற்ற நபர்கள் உள்­ள­டங்­கிய சர்­வ­தேச சுயா­தீன ஆணைக்­கு­ழு­வொன்றால் அவ­தா­னிக்­கப்­பட்டு வந்த உட­ல­கம ஆணைக்­கு­ழு­வினால் 2006, 2007 காலப்­ப­கு­தி­களில் விசா­ரிக்­கப்­பட்­ட­போதும் அவ்­வ­றிக்கை இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

குறித்த காலப்­ப­கு­தியில் குறித்த படு­கொலை சம்­பவம் இலங்கை மனி­த­வு­ரிமை ஆணைக்­கு­ழு­வி­னாலும் விசா­ரிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் 2014 ஆம் ஆண்டு ஜன­வரி மாத­ம­ளவில் வெளி­யி­டப்­பட்ட மனி­த­வு­ரிமை அறிக்­கையில்  மேற்­படி படு­கொ­லையில் பாது காப்பு படை­யினர் தொடர்புபட்­டி­ருந்­த­தாக கரு­திக்­கொள்­ளப்­பட்ட உட­ல­கம ஆணைக்­கு­ழு­வினால் கண்­ட­றி­யப்­பட்­டவை குறித்து நட­வ­டிக்கை ஏதும்  எடுக்­கப்­ப­டாமை குறித்து திகைப்­பூட்டும் அச்சம்  வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது. 

கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு  குறித்த படு­கொலை பற்­றிய மேல­திக விசா­ர­ணை­களை  அர­சாங்கம் மேற்­கொள்ள வேண்­டு­மென சிபா­ரிசு செய்­துள்­ளது. ஆகவே இப்­ப­டு­கொலை தொடர்பில் இலங்கை அரசு அதிக கரி­சனை காட்­ட­வேண்­டு­மென  ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை தனது அறிக்­கையில் குறிப்பிட்டிருந்தார்.

 நவநீதம்பிள்ளையால் சுட்டிக்காட்டப்பட்ட உடலகம ஆணைக்குழுவின் அறிக்கையானது  காலதாமதமாகவே சுமார் 8 வருடங்களுக்குப்பின் 20.10. 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. இவ்வறிக்கையில் குறிப்பிட்டவாறு குற்றம் இழைக்கப்பட்டவர்கள் தொடர்பில் அரசாங்கம் போதிய கவனம் செலுத்தவில்லையென்பது விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்ட விடயமாகும்.

உடலகம ஆணைக்குழுவானது இலங்கையில் இடம் பெற்ற மனிதவுரிமை மீறல் தொடர்பான 15 விடயங்களை ஆராயும் அதிகாரம் கொண்டதாக  நியமிக்கப்பட்ட நிலையில் திருகோணமலையில் இடம்பெற்ற படுகொலைகளான 5 மாணவர்களின் படுகொலை மற்றும் மூதூரில் நடந்த  தொண்டர் நிறுவனப்பணியாளர் 17 நபர்கள் படுகொலை செய்யப் பட்டமை மிக பிரதான விசாரணைப் படுத்தப்படவேண்டிய கொலைகளாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. 

  திருகோணமலை பிரதேசத்தில் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து இடம்பெற்ற மிகமோசமான பல படுகொலை சம்பவங்கள் இன்று மறக்கப்பட்டதாகவே காணப்படுகிறது. மூதூர் தொண்டர் நிறுவனப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.1996 ஆம் ஆண்டு குமாரபுரத்தில் நடந்த படுகொலை சம்பவத்தில்  21 அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டார்கள். இதன் சந்தேகத்தின் பேரில்  6 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் நீதிமன்றில் நிறுத்தப்பட்டபோதும் அவர்கள் நிரபராதிகள் என 2016 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்கள் . 

   நீதி தேவன் வாக்குப்படி ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளலாம் ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்படக்கூடாது என்பது இயற்கை நீதி கோட்பாடாக இருப்பினும் கொல்லப்பட்ட அப்பாவிகளின் ஆத்மாக்களுக்கு யாரால் நீதி வழங்கமுடியும்?


திரு­ம­லை­நவம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04