(எம்.மனோசித்ரா)

வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் அரசாங்கத்தில் பங்குபற்றாமையால் தான் அந்த பிரதேச மக்கள் இன்னும் வறுமை நிலையில் இருக்கிறார்கள். இந்த நிலைமை மாற்றியமைக்கப்படுவதோடு விஞ்ஞானபூர்வமாக ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்று பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார். 

அம்பாறையில் நேற்று இடம்பெற்ற ' ஜாதிக மஹ ' மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.