சாதனைகள் பற்றி நான் ஒருபோதும் எண்ணிப்பார்த்ததில்லை - ரோகித்

By Vishnu

07 Jul, 2019 | 02:31 PM
image

(இங்கிலாந்தின் லீட்ஸ் அரங்கலிருந்து நெவில் அன்தனி)  

சாதனைகள் பற்றி நான் ஒருபோதும் எண்ணிப்பார்த்ததில்லை. நான் கிரிக்கெட் விளையாடவே இங்கு வந்துள்ளேன். இயலுமான அளவு ஓட்டங்களைக் குவிப்பதே எனது நோக்கம். கிண்ணத்தை சுவீகரிப்பதுதான் பிரதானம். நேர்மையாக சொல்வதென்றால் சாதனைகள் பற்றி நான் எண்ணவில்லை என ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக லீட்ஸ், ஹெடிங்லே அரங்கில் சதம் குவித்ததன் மூலம் உலகக் கிண்ண அத்தியாயமொன்றில் 5 சதங்கள் குவித்த சாதனையாளர் என்ற பெருமையை ரோஹித் ஷர்மா பெற்றுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே ரோஹித் ஷர்மா மேற்கண்டவாறு குறப்பிட்டார்.

''எத்தனை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடினோம். எத்தனை ஓட்டங்களைக் குவித்தோம், எத்தனை சதங்கள் குவித்தோம் என்றெல்லாம் நான் எண்ணமாட்டேன். மேலும் கடந்த காலத்தைவிட நிகழ்கால்தைப் பற்றி மாத்திரம் சிந்தித்து விளையாடிவருகின்றேன். மைல்கற்களைப் பற்றியும் நான் நினைத்துப்பார்ப்பதில்லை. அவற்றுக்கும் அப்பால் திறமையாக விளையாடவேண்டும் என்ற உற்சாகத்தை இங்கு வந்துள்ள எனது குடும்பத்தினர் வழக்கிவருகின்றனர்'' என அவர் மேலும் கூறினார்.

2011இல் உலக சம்பியனான இந்திய அணியில் இடம்பெறாதது குறித்து ஏமாற்றம் அடைகின்றீர்களா எனக் கேட்கப்பட்டபோது,

''எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. அதனைக் கடந்துவந்துவிட்டேன். அப்போது வாய்ப்பு கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கத்தான் செய்கின்றது. ஆனால் இன்று சிறந்த நிலையை அடைந்துள்ளது அதிர்ஷ்டம் என நினைக்கிறேன். கடந்த காலங்களில் என்ன நேர்ந்து என்பது பற்றி நான் சிந்திப்பதில்லை. நிகழ்காலத்தைப் பற்றி கவனம் செலுத்துவதே முக்கியம் என்பதை நான் கூறிவந்துள்ளேன். நாங்கள் ஒரு குறிக்கோளை நோக்கி இங்கு வந்துள்ளோம். அந்த குறிக்கோள் இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை'' என பதிலளித்தார்.

''ஐ.பி.எல். போட்டிகளில் நான் ஒட்டங்கள் பெறாதபோது எனது பெரிய சகோதரர் யுவ்ராஜ் சிங் எனக்கு ஆறுதல் கூறனார். உரிய நேரத்தில் நீங்கள் சாதிப்பீர்கள் என்றார். அவர் உலகக் கிண்ணத்தை நினைத்துத்தான் அப்படி கூறினார் போலும். அவரும் அப்படித்தான். 2011 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் அவர் போதிய ஓடடங்களைப் பெறவில்லை. திடமான மனோ நிலையுடன் விளையாடினால் சாதிக்க முடியும் என்றார். அதுதான் அவரை 2011இல் பிரகாசிக்கவைத்தது'' என ரோஹித் ஷர்மா தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 வயது ரசிகை பாலியல் வன்கொடுமை...

2022-10-06 14:50:18
news-image

இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்திற்கு...

2022-10-06 11:48:30
news-image

8 ஆவது உலக கரம் சம்பியன்ஷிப்...

2022-10-06 11:16:02
news-image

இனி ஒருபோதும் கிரிக்கெட் விளையாட முடியாது-...

2022-10-05 17:23:59
news-image

ருசோவ் அபார சதம் : தென்னாபிரிக்காவுக்கு...

2022-10-05 09:19:09
news-image

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர்...

2022-10-04 21:17:20
news-image

இலங்கையின் ரஞ்சன் மடுகல்ல, குமார் தர்மசேன...

2022-10-04 16:01:06
news-image

மகளிர் இருபது 20 ஆசியக் கிண்ண...

2022-10-03 11:55:48
news-image

துடுப்பாட்டத்தில் மாலன், பந்துவீச்சில் வோக்ஸ் அசத்தல்...

2022-10-03 09:45:51
news-image

மில்லரின் அதிரடி வீண் : தென்னாபிரிக்காவை...

2022-10-03 10:49:34
news-image

கிரிக்கெட்டை போலவே கால்பந்தையும் பிரபலமாக்குவதே தனது...

2022-10-02 13:58:36
news-image

திறந்த சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி

2022-10-02 12:37:19