இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளரும் கிரிக்கெட்டி அரங்கில் 'The King Of Yorker' (த கிங் ஒப் யோக்கர்) என அழைக்கப்படும் லசித் மலங்க இந்தியாவுடன் நேற்று இடம்பெற்ற போட்டியுடன் சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

35 வயதாகும் லசித்த சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தாலும், எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் விளையாட எதிர்பார்த்துள்ளதாகவும், இன்னும் ஓர் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார்.

மலிங்க இதுவரை மொத்தமாக 4 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களில்  (2007,2011, 2015, 2019) விளையாடியுள்ளார்.

இந்த நான்கு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடர்களிலும் மொத்தமாக 29 போட்டிகளை எதிர்கொண்டு 56 விக்கெட்டுக்களை கைப்பற்றி, ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் கிளேன் மெக்ராத் முதல் இடத்திலும் ( 39 போட்டிகள், 71 விக்கெட்) முத்தையா முரளிதரன் இரண்டாவது இடத்திலும் (40 போட்டிகள், 68 விக்கெட்) உள்ளனர்.

லிசித் மலிங்க சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ண அரங்கில் இரண்டு தடவை ஹெட்ரிக் சாதனையை நிகழ்த்தியுள்ளதுடன், 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

2004 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் உலகில் கால்பதித்த லசித் மலிங்க இதுவரை 328 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 533 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

30 டெஸ்ட் போட்டி - 101 விக்கெட்

225 ஒருநாள் போட்டி - 335 விக்கெட்

13 இருபதுக்கு -20 போட்டி - 97 விக்கெட்