(ப.பன்னீர்செல்வம், ஆர்.ராம்) 

வடக்கில்  65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு பல முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றன.  எனினும் நாம் அதனை தொடர்ந்தும் முன்னெடுப்போமென சிறைச்சாலைகளின் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு மற்றும் இந்துசமய அலுவல்கள் அமைச்சர்  டி.எம்.சுவாமிநாதன் இன்று   சபையில் தெரிவித்தார். 

பாராளுமன்றில் இன்று புதன்கிழமை 23 இன் கீழ் இரண்டு என்ற நிலையியற் கட்டளையின் கீழ் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, யாழ்மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் வாழ்வாதார திட்டங்கள், அபிவிருத்தி திட்டங்கள், அதனை செயற்படுத்தும் நிறுவனங்கள் தொடர்பாக கேள்வியெழுப்பியதோடு 65 ஆயிரம்  வீட்டுத் திட்டத்தின் நிலைமை  தொடர்பாகவும் கேள்வியெழுப்பினார். 

அக்கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு ஒருவாரகால அவகாசத்தை  அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்  கோரியதோடு 65 ஆயிரம்  வீட்டுத்திட்டம் தொடர்பாக பல முட்டுக்கட்டைகள்  காணப்படுவதாகவும் எனினும் அது தொடர்பாக  கவனம் செலுத்தி அத்திட்டத்தை எவ்வாறாயினும் முன்னெடுப்பதாகவும் அதுகுறித்த பதிலையும் ஒருவார காலப்பகுதியினுள் வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.