பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற ஒருவர் காணாமல் போயுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் பயணித்த படகிலிருந்து கடலில் விழுந்துள்ளதாக கிடைத்த தகவலின்படி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இதையடுத்து குறித்த படகு மீன்பிடி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் 35 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

காணாமல் போன நபரை தேடும் பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்படுவதுடன், பேருவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.