நீராவியடிப் பிள்ளையார் ஆலய உற்சவம் ஆரம்பம்!

By Daya

06 Jul, 2019 | 11:04 AM
image

பழைய செம்மலை  நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று அதிகாலை கோட்டைக்கேணி  பிள்ளையார் ஆலயத்தில் இருந்து மடப்பண்டம்  எடுத்து வரப்பட்டதையடுத்து ஆரம்பமாகியுள்ளது.


பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் கோட்டைக்கேணி   பிள்ளையார் ஆலயத்தில் மடை பரவி பூசைகள் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அங்கிருந்து  மடப்பண்டம்  எடுத்து வரப்பட்டு தற்போது நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கே தமிழர் திருவிழா பொங்கல் உற்சவங்கள் ஆரம்பமாகி  இருக்கின்றது.


அந்த வகையில் தொடர்ந்து ஆலயத்திலேயே அபிஷேகம் மற்றும் வளர்ந்து நேர்ந்து பொங்கல்  மற்றும் விசேட அம்சமாக சமூக வலைத்தள நண்பர்கள் ஆலய நிர்வாகத்தோடு இணைந்து நடத்துகின்ற  108 பானைகளில் பொங்குகின்ற பொங்கல் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு பூஜை வழிபாடுகள் இடம்பெற இருக்கின்றது.


இந்த நிலையில் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளுக்கு நூற்றுக்கு மேற்பட்டபொலிஸார்  கொண்டுவந்து குவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்ட நிலையில்  பொங்கல் நிகழ்வுகள் சிறப்புற இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right