ரக்வானை  - கொரலேகம பகுதியில் சட்டவிரோத துப்பாகி மற்றும் வெடிப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இவ்வாறு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் , நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.