(ப. பன்னீர்செல்வம், ஆர். ராம்)

இந்தியாவில் உள்ள அகதிகள் உட்பட வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனைவருக்கும் பிரஜாவுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  பிரதமர் சபையில் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு  பதிலளிக்கையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.