ருமேனியாவில் 15 வயதிலேயே கர்ப்பமாகும் சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ருமேனியாவில் கிட்டத்தட்ட 2000 சிறுமிகள் இளம் தாய்மார்களாக வலம் வருகின்றனர். அதில் பெரும்பாலானோருக்கு வயது 16 க்கு கீழ் தான் உள்ளது. சிலர் 12 வயதிலேயே கர்ப்பிணியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
15 வயதிலே கர்ப்பமான லொரினா என்ற சிறுமி கூறுகையில்,
"கடவுள் எனக்கு அழகான மகளைக் கொடுத்துள்ளார். ஆனால் நானே சிறுமியாக இருக்கிறேன். அதுதான் எனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது" என்கிறார்.
இந்த சிறுமி தனது காதலருடன் வசித்து வரும் காலத்தில் திட்டமிடாமல் வாழ்ந்ததால் தான் கர்ப்பமாகி விட்டதாக அவர் கூறுகிறார்.
இவர் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே டயானா என்ற இன்னொரு 15 வயது சிறுமியும் வசிக்கிறார். தான் கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தபோது கதறி அழுததாகவும் "என் வாழ்க்கையே மாறிப் போய் விட்டது. என்னால் எனது வயதையொட்டி சிறுமிகளைப் போல சுதந்திரமாக இருக்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.
கடந்த 2014 ஆம் ஆண்டில் ருமேனியாவில் 18,600 இளம் தாய்மார்கள் பிள்ளைகளைப் பெற்றனர். அவர்களில் 2212 பேர் 12 முதல் 15 வயதுடையவர்கள் ஆகும்.
இதில் மூன்றில் 2 பங்குப் பேர் கிராமப் புறங்களில் வசிப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தாங்களே சிறுமிகளாக இருந்து கொண்டு கைக்குழந்தையுடன் இருப்பது பெரும் சிரமமாக இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM