விமானம் ஒன்று நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது பயணியின் இருக்கையில் திடீர் தீ பரவியமையால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. 

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலிருந்து லண்டன் சென்று கொண்டிருந்த போதே குறித்த விமானத்தில் தீ பரவியுள்ளது. 

குறித்த விமானத்தின் இரு இருக்கைகளுக்கு நடுவில் கைத்தொலைபேசிக்கான மின்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாகவும் அது தீயை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த விபத்து ஏற்பட்ட போது விமானத்தில் 217 பயணிகள் இருந்ததாகவும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.