திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை மேபீல்ட் தோட்டத்தில் மண்மேடு ஒன்று சரிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.

இந்த மண்மேடு சரிந்து விழும் பட்சத்தில் அதன் அருகில் வாழும் 25ற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடியிருப்புகள் அனர்த்தத்துக்குள்ளாகும் நிலை காணப்படுவதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேபீல்ட் தோட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முருகன் ஆலயத்திற்கு அருகில் இந்த பாரிய மண்மேடு வெடிப்புக்குள்ளான நிலையில் காணப்படுகின்றது.

தொடர்ந்து மாலை நேரங்களில் பெய்யும் கடும் மழையில் மண்மேடு சரிந்து விழும் அச்சம் நிலவுவதனால் குறித்த மண்மேடுக்கு அருகில் வசிக்கின்ற 100ற்கும் அதிகமான தொடர் வீட்டு குடியிருப்பாளர்களை தற்காலிகமான இடத்திற்கு மாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை தோட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் அதேவேளை இது தொடர்பாக அரசாங்க திணைக்களங்கள் மற்றும் நுவரெலியா மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவனர்கள் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

(க.கிஷாந்தன்)