(நா.தனுஜா)

நாட்டின் சட்டமுறைமையில் காணப்படும் குறைபாடுகளைப் பயன்படுத்தி பலம்பொருந்தியவர்கள் அப்பாவிகளைக் குற்றவாளிகளாக்குவதற்கு சாத்தியப்பாடுகள் உண்டு. எனவே மரணதண்டனையை மீள நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் குற்றவாளிகள் நால்வருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவதற்கான அனுமதிகளில் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்ததையடுத்து, அதற்குப் பலரும் எதிர்ப்பை வெளியிட்டுவரும் நிலையில் இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்னவும் தனது டுவிட்டர் பக்கத்தில் மரணதண்ட்னைக்கு எதிரான தனது நிலைப்பாட்டைப் பதிவு செய்திருக்கிறார். 

ஒருலரின் உயிரைப் பறிப்பதற்கோ அல்லது வேறொருவர் ஊடாக உயிரைப் பறிப்பதற்கோ எவருக்கும் உரிமையில்லை என்பதே அதற்கான பிரதான காரணமாகும் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.