கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் வரலாறுகளை கடைப்பிடிக்க வேண்டிய அதனை அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எங்கள் எல்லோரிடத்திலும் உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் கரும்புலிகள் நாள் இன்று (05-07-2019)உணர்வு பூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் தமிழர்களின் உடைய வரலாறு தற்போது அழிக்கப்பட்டு வருகின்றது இந்த வரலாறுகளை கடைப்பிடிக்கவேண்டிய அதனை அடுத்த கட்டத்துக்கு கடத்திச் செல்ல வேண்டிய பொறுப்பு எல்லோரிடத்திலும் உள்ளது இதில் இருந்து நாங்கள் தவறிச் செல்கின்றோம் அல்லது விலகிச் செல்கிறோம் என்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது.
இந்த உயிராயுதமான கரும்புலிகளின் வாழ்க்கை மறக்க முடியாத ஒன்றாகும் ஒவ்வொரு மாவீரர்களின் கனவுகளுக்கு பின்னாலும் பல்வேறுபட்ட தார்ப்பரியங்கள் உள்ளன அந்தப் பெரும் தியாகமும் இன்று இருக்கின்ற சமூகத்துக்கு கடத்தப்படவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தற்கொடையாக தம் உயிர் நீத்த கரும்புலிகளின் நினைவுநாள் இன்று தமிழர்தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அலுவலகமான அறிவகத்தில் இன்று பகல் கரும்புலிகள் நாள் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசுபதிப்பிள்ளை, மற்றம் கரைச்சி, பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேசசபைகளின் தவிசாளர்கள் உறுப்பினர்கள் கட்சியின் செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM