இத்தாலியில் எரிமலை வெடிப்பு: சுற்றுலா பயணி பலி

Published By: Digital Desk 3

05 Jul, 2019 | 11:40 AM
image

இத்தாலியின் வடக்கு பகுதியில் உள்ள சிசிலியன் பகுதியில் ஸ்ட்ரோம்போலி என்ற தீவில் எரிமலையில் வெடித்தமையால்  சுற்றுலா பயணி ஒருவர்  உயிரிழந்த சம்பவம்  ஒன்று இடம்பெற்றுள்ளது.

பிரபல சுற்றுலா தலமான ஸ்ட்ரோம்போலியில், கடலை ஒட்டியவாறு எரிமலை ஒன்று இருக்கிறது. இந்த எரிமலையில் அவ்வப்போது வெடிப்பு ஏற்பட்டு, சிறிதளவு எரிகுழம்புகளை கக்குவது வாடிக்கையாக இருந்து வருகிறது.

பல்வேறு நாடுகளில் இருந்து ஸ்ட்ரோம்போலி தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், மலையடிவாரத்தில் இருந்து 924 மீட்டர் தூரம் வரை மலையேற்ற பயிற்சியில் ஈடுபடவும், உருகிய நிலையிலிருக்கும் பாறைகளை பார்க்கவும் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த எரிமலை திடீரென வெடித்து, எரிகுழம்பு வெளியேறியது. இதனால் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 30–க்கும் மேற்பட்ட சுற்றலா பயணிகள் பயத்தில் கடலில் குதித்தனர். எரிமலை வெடித்தபோது, மலையில் இருந்து விழுந்த கல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

எரிமலை தொடர்ந்து வெடிப்பு ஏற்பட்டு சாம்பல் புகையை கக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் மசூதிக்கு அருகில் தற்கொலை குண்டு...

2023-09-29 15:05:32
news-image

வாச்சாத்தி வழக்கு: 215 பேரின் தண்டனையை...

2023-09-29 13:49:08
news-image

நரகத்தின் கதவுகள் திறந்தது போல இருந்தது...

2023-09-29 11:37:01
news-image

மணிப்பூரில் மாணவர்கள் போராட்டம் தீவிரம் :...

2023-09-29 09:26:11
news-image

கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் தீவிரவாதி நிஜாரை...

2023-09-28 14:15:41
news-image

லொறிக்குள் மரணத்தின் பிடியில் சிக்குண்டிருந்த ஆறு...

2023-09-28 10:55:09
news-image

மத்தியப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்குப் பின்...

2023-09-27 17:11:01
news-image

நகர்னோ கரபாக்கில் ஆர்மேனியர்கள்இனப்படுகொலை இனச்சுத்திகரிப்பு ஆபத்தை...

2023-09-27 12:11:40
news-image

காலிஸ்தான் தொடர்பு | பஞ்சாப், ஹரியாணா,...

2023-09-27 11:43:30
news-image

ஹர்தீப் கொலை பற்றி எங்களிடம் கேள்வி...

2023-09-27 10:38:58
news-image

அசர்பைஜானில் எரிபொருள் நிலையம் தீப்பிடித்ததில் 68...

2023-09-27 09:48:46
news-image

ஈராக்கில் திருமணநிகழ்வில் பாரிய தீ விபத்து...

2023-09-27 11:08:04