மக்கள் மீது அக்கறை இல்லாத ஜெயலலிதாவை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, பொது மக்கள், அமைச்சர்கள், அரசு அலுவலர்கள் என யாரையுமே சந்திக்காமல் இருப்பவர் ஜெயலலிதா.

மத்திய அமைச்சர்கள் இரண்டு பேர் ஜெயலலிதாவை சந்திக்க முயன்றும் முடியவில்லை. இதை அவர்களே தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நேரத்தில் மட்டும் தான் ஜெயலலிதா மக்களை சந்திக்க வருவார்.மக்கள் மீது அக்கறை இல்லாத ஜெயலலிதாவை வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.