ரிஷாத் பதியுதீனை பாதுகாப்பது யார்  ?  - எஸ்.பி. திஸாநாயக்க 

Published By: Daya

04 Jul, 2019 | 04:50 PM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

ரிஷாத் பதியுதீனுக்கு  எதிராக நாங்கள் தெரிவித்திருக்கும் கொலை, ஊழல் மோசடி  குற்றச்சாட்டுகள், அவரை கைதுசெய்வதற்கு போதுமானதாகும். ஆனால்  அவரை கைதுசெய்ய விடாமல் யார் தடுக்கின்றார் என்பதை தேடிப்பார்க்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

 

பொரளையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பரிமாற்று கேந்திர நிலையதில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இவ்வாறு தெரிவித்துள்ளார். 

ரிஷாத் பதியுதீனின் மனைவியின் வங்கிக்கணக்கில் 5கோடி ரூபா பரிமாற்றப்பட்டுவந்மை தொடர்பில் தற்போது விசாரணை இடம்பெற்று வருகின்றது. என்றாலும் இவ்வளவு பாரிய தொகை தொடர்பில் விசாரணை இடம்பெறுகின்றபோதும் அவரின் மனைவி இன்னும் சுதந்திரமாகவே செயற்பட்டு வருகின்றார். அதனால் பொலிஸார் இந்த விடயங்களை சாதாரணமாக கருதாமல் முறையான விசாரணையை மேற்கொள்ளவேண்டும். 

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கடந்த 2010/ 2013 காலப்பகுதில் மன்னார் மாவட்டத்தில் 68 காணி உறுதிகளில் 6ஆயிரத்தி 568 ஏக்கர் காணிகளை தனக்கும் தனது குடும்பத்தினர் மற்றும் தனக்கு நெருக்கமான சிலரது பெயருக்கு கொள்வனவு செய்திருக்கின்றார். குறித்த காணித் துண்டுகள் அனைத்தும் அந்த பிரதேசத்தில் பரம்பரையாக வாழ்ந்து வந்த முஸ்லிம் மக்களுக்கு சொந்தமானதாகும். அவர் அந்த மக்களிடமிருந்து அச்சுறுத்தியும் பெறுமதியைவிட அதிக பணம் கொடுத்துமே பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் 3ஆயிரம் ஏக்கர் காணி குறித்த ஒரு பிரதேசத்திலிருந்து மாத்திரம் கொள்வனவு செய்திருக்கின்றார். ஏனைய காணிகளை மன்னார் மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து கொள்வனவு செய்திருக்கின்றார். அதேபோன்று அவருக்கு புத்தளத்திலும் கேரளாவிலும் காணிகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதுதொடர்பிலும் நாங்கள் தேடிவருகின்றோம் என்றார். 

பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ரிஷாத் பதியுதீன் சாட்சியமளிக்கும்போது, தனக்கும் தனது குடுத்துக்கும் 55 ஏக்கர் காணி மாத்திரமே இருப்பதாகவும் மேலதிகமாக இருந்தால் அதனை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். ஆனால் அவர் தெரிவுக்குழுவில் தெரிவித்த விடயங்கள் அனைத்தும் பொய். அவருக்கு எதிராக நாங்கள் தெரிவித்திருக்கும் கொலை, ஊழல் மோசடி  குற்றச்சாட்டுகள், அவரை கைதுசெய்வதற்கு போதுமானதாகும். ஆனால்  அவரை கைதுசெய்ய விடாமல் யார் தடுக்கின்றார் என்பதை தேடிப்பார்க்கவேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51