தென்னிந்திய சுப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் கபாலி படத்தின் டீசர் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றுள்ளதோடு மேலும் விஜயின் தெறி படத்தின் டீசர் லைக்குகளையும் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெறி டீசர் இதுவரை 3 லட்சத்து மூன்றாயிரம் லைக்குகளை பெற்றுள்ளதுடன், இதனை தற்போது முறியடித்து 3 லட்சத்து 13 ஆயிரம் லைக்குகளை கபாலி டீசர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஞாயிறு காலை 11 மணிக்கு இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்ற கபாலி வெளியான முதல் 22 மணிநேரத்தில் இந்த டீசர் 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததன்மூலம் முதல் நாளில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட இந்திய படத்தின் டீசர் எனும் சாதனையை கபாலி நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.