அக்மீமன, பிரதேசத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றின்,  அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் குறித்த பாடசாலைக்குள் உட்பிரவேசிக்க முயற்சித்தவேளை, அங்கு கடமையிலிருந்த இராணுவ வீரர் தடுத்த சந்தர்ப்பத்தில், குறித்த துப்பாக்கி  பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த துப்பாக்கி சூட்டில்  காயமடைந்த நபர்  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதனையடத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.