கோபா அமெ­ரிக்கா கிண்ண கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்டி தற்­போது பிரே­ஸிலில் நடை­பெ­ற்று வுரகின்ற நிலையில்,  கோபா அமெ­ரிக்கா கிண்ண கால்­பந்­தாட்ட சுற்­றுப்­போட்­டியில் பெரு நாட்டின் அணியை இறு­திப்­போட்­டிக்கு அழைத்துச் செல்­வ­தற்கு பங்­கேற்றும் வீரர்­க­ளுக்கு தான் முத்தம் வழங்க விரும்­பு­வ­தாக பெருவின் பிர­பல நடிகை ஸ்டெபானி கயோ தெரி­வித்­துள்ளார்.

இந்நிலையில், நடப்புச் சம்­பி­ய­னான சிலி அணி­யுடன் அரை­யி­றுதிப் போட்­டியில் பெரு அணி மோத­வுள்­ளது. இப்­போட்­டியில் பெரு அணி வெற்றி பெற்று அவ்­வ­ணியை இறு­திப்­போட்­டிக்கு தகுதி பெறச் செய்யும் வீரர்கள் அனை­வ­ருக்கும் தான் முத்தம் வழங்கத் தயார் என நடிகை ஸ்டெபானி கயோ தெரி­வித்­துள்ளார்.

தொலைக்­காட்சித் தொடர்கள் மூலம் பெரு மற்றும் கொலம்­பி­யாவில் மிகப் பிர­ப­ல­மா­ன நடிகை ஸ்டெபானி கயோ,31 வய­தானவராவார். பெரு அணி இதற்­குமுன் 1939 மற்றும் 1975 ஆம் ஆண்­டு­களில் கோபா அமெரிக்கா கிண்ணத்தை வென்றுள்ளது. இம்முறை 3 ஆவது தடவையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளமையும் குறிப்பிடதக்கதோர் விடயமாகும்.