(எம்.மனோசித்ரா)

திருகோணமலை - கல்லடிச்சேனை கடற்பிரதேசத்தில்  நேற்று கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த போதே குறித்த சந்தேகநபர்கள் 16 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்கள் 24 - 60 வயதுக்கு இடைப்பட்ட, கின்னியா பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்களிடமிருந்து இரு மீன்பிடிப்படகுகளும், தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெறுகல் மீன்வள பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.