வவனியா தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியில் இன்று காலை நிலநடுக்க அதிர்வுகளை அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம் பகுதியைச்சுற்றிய சில வீடுகளில் நில நடுக்க அதிர்வுகள் உணரப்பட்டுள்ள தாகவும் காலை 9.52மணியளவில் இது உணரப்பட்டுள்ள போதிலும் நான்கு, ஜந்து செக்கன் வரையும் இது நீடித்துள்ளதுடன் வீடுகளுக்கு எவ்வித சேதங்களும் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.