Published by R. Kalaichelvan on 2019-07-04 11:40:47
ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் பதவி க்கு முதல் தடவையாக பெண்ணொருவரின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஜேர்மனிய பெண் பாதுகாப்பு அமைச்சரான உல்ஸுலா வொன் டெர் லே யன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பிரதான வேட்பாளர்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து ஐரோப்பிய ஆணையகத் தலைவர் பதவியிலிருந்து செல்லும் ஜீன் கிளோட் ஜங்கரின் இடத்திற்கு நியமிக்கப்படவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்ரின் லகார்ட் ஐரோப்பிய மத்திய வங்கியின் முதலாவது பெண் தலைவராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக இடம்பெற்ற சிரமமிக்க பேச்சுவார்த்தைகளையடுத்தே மேற்படி நியமனங்கள் தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.
அதேசமயம் ஐரோப்பிய சபையின் தலைவர் டொனால்ட் ட்ரஸ்க்கின் இடத்திற்கு பெல்ஜியத்தின் தாராளவாத பிரதமர் சார் ள்ஸ் மைக்கெல் நியமிக்கப்பட்டுள்ளதுடன் ஐரோப்பிய ஒன்றிய வெளிநாட்டுக் கொள்கைத் தலைவர் பதவிக்கு ஸ்பெயின் வெளிநாட்டு அமைச்சர் ஜோசப் போரெல்லின் பெயர் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளது.
அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐந்தாவது முக்கிய பதவி நிலையான ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் பதவிக்கான தெரிவு அடுத்து மேற்கொள்ளப்படவுள்ளது. ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பதவி நிலைகளில் அநேகமானவை அந்தப் பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.