(நா.தினுஷா)

பெருந்­தோட்ட  தொழி­லா­ளர்­க­ளுக்கு வழங்­கு­வ­தாக அறி­வித்­தி­ருந்த மேல­திக கொடுப்­ப­ன­வான 50 ரூபா நிச்­ச­ய­மாக வழங்­கப்­படும்.  ஆனால் அந்த தொகையை எவ்­வாறு வழங்­கு­வது என்­பதில்  பிரச்­சினை எழுந்­துள்­ள­தா­கவும் இது தொடர்­பான இறுதித் தீர்­மானம் இன்று அல்­லது நாளை எடுக்­கப்­படும்  என்று  தேசிய ஒரு­மைப்­பாடு, அர­ச­க­ரும மொழிகள், சமூக மேம்­பாடு மற்றும் இந்து சமய அலு­வல்கள் அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்­துள் ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறி­யுள்­ள­தா­வது, பெருந்­தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு  வழங்­கு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்த  மேல­திக  கொடுப்­ப­ன­வான 50 ரூபாவை அவ்­வாறே பெற்­றுக்­கொ­டுக்க தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. ஆயினும் மேல­திக கொடுப்­ப­ன­வான இந்த 50 ரூபாவை எவ்­வாறு வழங்­கு­வது என்­பதில் சிக்கல் எழுந்­துள்­ளது.  

நாளாந்த சம்­பளம் 750 ரூபா­வுக்கு மேல­தி­க­மாக  50 ரூபா இணைக்­கப்­பட்ட 800 ரூபா பெற்­றுக்­கொ­டுக்­கப்­படும். ஆனால்  அதனை மாதாந்த சம்­பளம்  அடிப்­படை சம்­ப­ளத்­துடன்  சேர்த்துக் கொடுப்­பதா அல்­லது  நாளாந்த சம்­ப­ளத்­துடன் சேர்த்து கொடுப்­பதா என்ற கேள்வி எழுந்­துள்­ளது. இது குறித்து  தோட்ட கம்­ப­னி­க­ளிடை­ யேயும்  பிரச்­சினை எழுந்­துள்­ளது. 

ஆகவே இந்த மேல­திக கொடுப்­ப­னவை எவ்­வாறு வழங்­கு­வது என்பது தொடர்பில்  ஆராய்வதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.  ஆகவே  இன்று  அல்லது நாளை  இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படும்.