உலகம் முழுவதும் நேற்று சில மணி நேரங்களாக செயலிழந்த வட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தற்போது வழமைக்கு திரும்பி உள்ளன.

மில்லியன் கணக்கான  பயனாளர்கள் வட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று சிலமணி நேரமாக புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால் பரிதவித்து வந்தனர்.

குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஸ்டோரிகள் அனுப்ப முடியவில்லை என்றும் புகைப்படங்களை பார்க்க முடியவில்லை என்றும் முற்றாக வேலை செய்யவில்லை என்றும் பல ஆயிரம் பயனார்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.

ஆசிய நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்தது.

இந்நிலையில் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பேஸ்புக் நிறுவனம்,“நேற்று எங்களின் பராமரிப்பு நடவடிக்கைகள் நடைபெற்றன. எனவே ஒரு சில இடங்களில் பயனாளர்களால் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தற்போது நாங்கள் சரி செய்து விட்டோம்” எனத் தெரிவித்துள்ளது.