எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபா நாயகர் கருஜயசூரிய உள்ளிட்ட கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு வழங்க வேண்டும் என நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ஒருவராக இருக்க வேண்டும். அத்துடன் அவருக்கு ஜனாதிபதியாகக் கூடிய தகுதியும் இருக்க வேண்டும்.

அந்த வகையில் அமைச்சர் சஜித் பிரேமதசவுக்கு அவ்வாறான தகுதி உள்ளது. நான் அதற்காக தற்போதைய கட்சியின் தலைவரை  குறை கூறமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட காணொளிப் பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்