வத்துகாமம் கல்வி வலயத்திலுள்ள மடவளை மதீனா தேசிய பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்யக்கோரி பாரிய ஆர்பாட்டம் ஒன்றும் சுழற்சி முறை சத்தியாக்கிரகம் ஒன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.

பாடசாலை நிர்வாகத்தால் ஊடகங்களுக்கு கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டது.

காலை 8.30 மணி முதல் ஆர்பாட்டம் ஆரம்பமாகியதுடன் கண்டி - வத்துகாமம் பிரதான பாதை இடைகிடைக ஸ்தம்பித்தது. 

ஆர்ப்பாட்டக் காரர்களுக்குரிய பதிலை தகுதி வாய்ந்த அதிகாரிகள் வழங்கும் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.

பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் எனப் பெருமளவு பொது மக்கள் கலந்து கொண்டனர். அதேநேரம் பாடசாலை வழமைபோல் நடை பெற்றது. வத்துகாமம் கல்விக் காரியாலயத்திலிருந்து வலயக் கல்விப் பணிப்பாளர் உட்பட அதிகாரிகள் பலர் பாடசாலைக்கு சமுகமளித்திருந்த போதும் பேச்சுவார்த்தைகளின் போது அவ் அதிகாரிகளும் பாடசாலை நிர்வாகமும் ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை.

மத்திய மாகாண சபை அங்கத்தவர்களான, செய்னுள் ஆப்தீன் லாபிர், ஹிதாயத் சத்தார். எஸ்.கே. சமரநாயக்கா உட்பட இன்னும் சில அரசியல் வாதிகளும் சமுகமளித்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பின்வரும் சுலோகங்களை ஏந்தியும் பதாதைகளை ஏந்தியும் இருந்தனர்.

அதில் முக்கிய மாக ‘கற்றுக் கொள் கற்றுக் கொள் பேசக் கற்றுக் கொள்..’ ‘அவமதிக்காதே அவமதிக்காதே பெற்றோரை அவமதிக்காதே..’ ‘போராட்டம் போராட்டம் ஹிதாயா போகும்வரை போராட்டம்…’ ‘வெளியேறு வெளியேறு ஹிதாயா வெளியேறு…’,‘ஓடு ஓடு ஹிதாயா வெளியே ஓடு..’, ‘போடாதே போடாதே டபள்கேம் போடாதே…’, ‘கல்விக்குப் பஞ்சம், பாடசாலையில் கைலஞ்சம்…’