கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள ஜேர்மனி தொழில்நுட்பக் கல்லூரிக்கு இன்று  விஜயம் மேற்கொண்ட ஜெர்மன் நாட்டு உயர்ஸ்தானிகர்  ஜோன் ரோட்  தொழில்நுட்பக் கல்லூரியின் நிலைகள் தொடர்பாக கல்லூரியின் முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, தொழில்நுட்பக் கல்லூரியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அவர் கேட்டறிந்து கொண்டார்.

குறித்த தொழிற்நுட்பக் கல்லூரிக்கான உதவிகள் ஜேர்மன் அரசாங்கத்திடமிருந்தும், இலங்கை அரசிடமிருந்தும் கிடைத்து வந்தன இந்த நிலையில் இலங்கை அரசின் உதவியும் கிடைக்காத நிலையில் தொழில்நுட்பக் கல்லூரியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த கலந்துரையாடலின் பின்னர்  ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியையும் பார்வையிட்ட பின்னர் உயர்ஸ்தானிகர் ஜோன் ரோட்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொது இலங்கையில் உள்ள இரத்மணாளை மொறட்டுவை ஆகிய தொழில்நுட்பக் கல்லூரிகழும் இதேபோன்ற தரத்தில் இயங்கிக்கொண்டு  இருக்கிறது என்றும் தெரிவித்தார்.