திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 13 படையினரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பிட்ட வழக்கை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என திருகோணமலை பிரதான நீதவான் முகமட் ஹம்சா அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் 12 விசேட அதிரடிப்படையினர் அடங்கிய சந்தேகநபர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2006 ஜனவரி  இரண்டாம்  திகதி திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்களை சுட்டுக்கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த படையினரே விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மனோகரன் ரஜீகரன்,யோகராஜா ஹேமசந்திரன் ,லோகித ராஜா ரோகன் , தங்கதுரை சிவநாதன்,சண்முகராஜா கஜேந்திரன் ஆகிய மாணவர்களே சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.