Marvel Marketing நிறுவனத்தினால் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிறுவர்களுக்கான டயபர்ஸ்களை வழங்கும் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் 

Published By: R. Kalaichelvan

03 Jul, 2019 | 03:59 PM
image

இலங்கையின் தயாரிப்பாக சர்வதேசச் சந்தையில் சுகாதார தெரிவுகளில் முன்னணியில் திகழும் Marvel Marketing (Pvt) Ltd நிறுவனமானது தமது தயாரிப்புக்களை உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை கட்டுநாயக்க, சீதுவ பிரதேசத்தில் உள்ள Diaper World நிறுவனத்தின் கீழ் செயற்படுத்திக் கொண்டு வருவதோடு கடந்த வாரம் தங்களது வியாபார நோக்கை தவிர்த்து சமூக சேவை செயற்றிட்டமொன்றை மேற்கொண்டிருந்தது. 

அதற்கேற்ப 2018ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 03 வருடங்களுக்கு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு இலவசமாக பெற்றுத்தரும் டயபர்ஸ் செயற்றிட்டத்தில் முன்னர் பெற்றுத்தரும் அளவிலும் பார்க்க மேலதிகமான எண்ணிக்கையை பெற்றுத்தருவதற்கு Marvel Marketing நிறுவனம் தீர்மானித்துள்ளது.

2018 ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்நிவாரண செயற்றிட்டத்தில் சிறுவர் வைத்தியசாலைக்கு மாதமொன்றிற்கு சுமார் 4000 டயபர்கள் பெற்றுத்தரப்பட்டது. இருப்பினும் வைத்தியசாலை குழாமினரின் வேண்டுகோளுக்கு இணங்க இச்சுகாதார டயபர்கள் 6000ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

 இவ் டயபர்களை பெற்றுத்தரும் நிகழ்வு கடந்த 14ஆம் திகதி லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வளாகத்தில் உத்தியோகபூர்வமாக நடைபெற்றது.

அன்றைய தினம் Marvel Marketing (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் வீ என். சிவேந்திரன் அவர்கள் தமது கரங்களால் இவ் டயபர்களை லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண அவர்களுக்கு கையளித்தார்.

அத்துடன் Marvel Marketing (Pvt) Ltd  நிறுவனத்தின் முகாமையாளர் கெமுனு அபேகுணவர்தன அவர்கள், விற்பனை பிரதிநிதி திமுத்து ரங்கன அவர்கள், இணைய விற்பனை பிரதிநிதி கிஷாந்த் அவர்கள், லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இருதய நோய் (சிறுவர்) சிறப்பு வைத்தியர் ஷெஹான் பெரேரா, Marvel Marketing ஊழியர் குழாமினரும் கலந்து கொண்டனர்.

நாட்டிலுள்ள பிரதான மற்றும் பாரிய சிறுவர் வைத்தியசாலையான லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையானது குழந்தைகளுக்காக விசேட சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றது. வைத்தியசாலையில் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளின் சுகாதார நலன்களை கருதி நாளொன்றுக்கு ஒரு குழந்தைக்கு 4-10 டயபர்கள் வீதம் தேவைப்படுகின்றது.

சுகவீனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்களில் 85%  இற்கும் அதிகமானோருக்கு இச்செலவினை மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. 

அதனால் இச்செலவினை வைத்தியசாலையே ஏற்கவிருந்தது. இதன்போது ஒரு டயபருக்கு ரூபா.50 வீதம் செலவிட வேண்டியிருந்ததோடு அரசால் இதுபோன்றதொரு பாரிய தொகையை ஏற்க முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டிருந்தது. இவ்வாறானதொரு சூழலில் குழந்தைகளின் நலனைக் கருதிற்கொண்டு அவர்களுக்குத் தேவையான டயபர்களை இலவசமாகப் பெற்றுத்தருவதற்கு Marvel Marketing (Pvt) Ltd நிறுவனம் முன்வந்தது. 

சிறுவர்களுக்கு டயபர்ஸ்களைப் பெற்றுத்தருவது பற்றி ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண அவர்கள் கருத்து தெரிவிக்கையில்'சிறுவர்களுக்கான சுகாதாரத் தெரிவுகளின் தேவை எமது வைத்தியசாலைக்கு அதிகளவில் உள்ளது. 

எமது தேவையை உணர்ந்து நிறைவேற்றுவதற்கு இலங்கையின் தொழில்முனைவோரான Marvel Marketing நிறுவனம் தயக்கமின்றி முன்வந்தமையை எண்ணி நாம் பெருமையடைகின்றோம். அதைப்போலவே அவர்கள் டயபர்ஸ்களை எமக்கு தொடர்ந்தும் பெற்றுத் தருவது தொடர்பில் நான் இவ்வேளையில் Marvel Marketing  நிறுவனத்தின் பணிப்பாளர் வீ.என்.சிவேந்திரன், முகாமையாளர் கெமுனு அபேகுணவர்தன,விற்பனை பிரதிநிதி திமுத்து ரங்கன உட்பட சகல ஊழியர் குழாமினருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு டயபர்ஸ்களை பெற்றுத்தருவதற்கு  Marvel Marketing நிறுவனம் முன்வந்ததன் பின்னணிப் பற்றி இருதய நோய் (சிறுவர்) சிறப்பு வைத்தியர் ஷெஹான் பெரேரா அவர்கள் கருத்து தெரிவிக்கையில் ' எமது வைத்தியசாலையில் இருதய நோய்க்கான சத்திர சிகிச்சை மேற்கொண்டு நீண்ட நாட்களாக தங்கியிருந்த குழந்தையொன்றிற்கு அவரது தேவைக்கான டயபர்ஸ்கள் போதாத சந்தர்ப்பத்தில் அக்குழந்தையின் தாய் மற்றுமொருவரிடம் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

இச்சம்பவம் குறித்து சிறிது நாட்களின் பின்னரே நாம் அறிந்து கொண்டோம்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்தே நாங்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவரும் பெரும்பாலான குழந்தைகளின் பெற்றோர்களுக்கு பொருளாதார நெருக்கடிகள் இருப்பதை தெரிந்து கொண்டோம். அதனால் தங்களது குழந்தைகளுக்கான சுகாதார தெரிவுகளுக்கு செலவிட முடியாது அவதிப்படும் பெற்றோர் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்வதற்கு எண்ணினோம். 

அவ்வேளையிலேயே எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சமூக சேவையை மாத்திரம் கருத்திற்கொண்டு Marvel Marketing நிறுவனம் தங்களால் இயன்ற உதவியைப் பெற்றுத்தர முன்வந்தது. 

அதன் பிறகே அந்நிறுவனத்துடன் நாங்கள் 03 வருடகால ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்டோம். தற்பொழுது குழந்தைகளுக்கான சுகாதாரத் தெரிவுகளின் தேவை அதிகரித்துள்ளமையினால் Marvel Marketing நிறுவனத்தினால் வைத்தியசாலைக்கு இலவசமாக வழங்கப்படும் டயபர்ஸ்களின் அளவு 6000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இச்சமூக சேவைப் பற்றி கருத்து தெரிவித்தMarvel Marketing நிறுவனத்தின் பணிப்பாளர் வீ.என் சிவேந்திரன் மற்றும் முகாமையாளர் கெமுனு அபேகுணவர்தன அவர்கள் 'இலங்கையில் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக எமது நிறுவனம் உள்நாட்டு வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வென்று சிறந்த உயர்தரத்திலான சிறுவர் மற்றும் மகளிருக்கான சுகாதாரத் தெரிவுகளை பல வருடங்களாக உள்நாட்டு சந்தைக்கு பெற்றுத்தருகின்றது.

 வியாபார நடவடிக்கைகள் தவிர்த்து இது போன்ற சமூக சேவையில் எமது நிறுவனத்தை இணைத்துக்கொள்வதற்கு வாய்ப்பளித்துள்ளமை தொடர்பில் லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண அவர்கள், இருதய நோய் (சிறுவர்) விசேட வைத்தியர் ஷெஹான் பெரேரா அவர்கள் உட்பட வைத்தியசாலையின் ஊழியர் குழாமினருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். எதிர்காலத்திலும் குழந்தைகளுக்காக இது போன்ற சேவைகளை செய்ய காத்திருக்கின்றோம்” என்று கூறினர்.

(இடமிருந்து வலமாக) Marvel Marketing நிறுவனத்தின் இணைய விற்பனை பிரதிநிதி கிஷாந்த், லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் இருதய நோய் (சிறுவர்) சிறப்பு வைத்தியர் ஷெஹான் பெரேரா, பணிப்பாளர் வைத்தியர் அஜித் தந்தநாராயண, Marvel Marketing நிறுவனத்தின் பணிப்பாளர் வீ. என் சிவேந்திரன், முகாமையாளர் கெமுனு அபேகுணவர்தன மற்றும் விற்பனை பிரதிநிதி திமுத்து ரங்கன ஆகியோரை படங்களில் காணலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58