இலங்கை வங்கி ஊழியர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வங்கி ஊழியர்களின் கவனயீர்ப்புப் போராட்டம் ரயில் நிலைய வீதியிலுள்ள பிரதான இலங்கை வங்கியிலிருந்து ஆரம்பமாகி மணிக்கூட்டுக் கோபுரம் ஊடாக கண்டிவீதி வழியாக கார்கில்பூட் சிட்டிக்கு முன்பாக சென்று கவனயீர்ப்புப் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்று பகல்  12.30மணிமுதல் பிற்பகல் 1.30மணிவரையும் இடம்பெற்ற இப்போராட்டத்தில் ஊழியர் உணவிற்கு தேனீருக்கு வரி வேண்டாம், இல்லாமல் ஆக்கப்பட்ட ஓய்வூதியத்தை மீள வழங்கு, வங்கி ஊழியர்களின் உரிமையை உறுதி செய், ஓய்வூதியக் கொடுப்பனவு வழுக்களைத் திருத்துக, பெற்றுக்கொள்ளத் தக்க ஒரு ஓய்வூதியத்தை தருக போன்ற தமிழ், சிங்கள வசனங்களைத் தாங்கிய பதாதைகளுடன் பிரதான வீதியூடாகச் சென்ற வங்கி ஊழியர்கள் போராட்டத்தினை மேற்கொண்டனர்.

இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தினை இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.