( எம்.மனோசித்ரா )

கட்பிட்டி - வன்னிமுந்தலம் பிரதேசத்தில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

20 பைகளில் பொதியிட்ட 44 கிராம் கேரள கஞ்சா விற்பனை செய்வதற்கு ஆயத்தமாக வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் 38 மற்றும் 42 வயதுடைய, கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கேரள கஞ்சாவை விற்பனைக்காக கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படவிருந்த முச்சக்கர வண்டியொன்றும் இவர்களிடமிருந்து மீட்க்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தளம் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

 இவர்களிடமிருந்து மீட்க்கப்பட்ட கேரள கஞ்சா , முச்சக்கர வண்டி என்பனவும் புத்தளம் போதைப்பொருள் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.