போதைப் பொருள் பாவனையை தடை செய்யக் கோரி வவுனியா, செட்டிகுளம் மகாவித்தியாலய மாணவர்கள் ஊர்வலம் ஓன்றினை இன்று மேற்கொண்டதுடன், பிரதேச செயலாளரிடம் மகஜர் ஓன்றினையும் கையளித்தனர்.

செட்டிகுளம் மகாவித்தியாலத்தின் முன்றலில் ஆரம்பமான மாணவர்களின் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான ஊர்வலம் செட்டிகுளம் மதவாச்சி வீதி வழியாக சென்று வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலகத்தை அடைந்தது.

கவனயீர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மோதைப்பொருள் பாவனைக்கு எதிரான சுலோகங்கள் எழுத்தப்பட்ட பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.

அத்துடன், வெண்கல செட்டிகுளம் பிரதேச செயலாளர் க.சிவகரனிடம் செட்டிகுளம் பகுதியில் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு மாணவர்கள் மகஜர் ஓன்றினையும் இதன்போது கையளித்தனர்.

இவ் ஊர்வலத்தில் செட்டிகுளம் மகாவித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.